• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

படத்துல அரபிக்குத்து பாட்டு இல்லையா

ரசிகர்கள் மத்தியில் படுஹிட் அடித்த பாடலான “அராபிக் குத்து” பாடல், பீஸ்ட் படத்திலேயே கிடையாதாம். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது!

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் வேலைகள் முடிவடையும் முன்பே ஃபஸ்ட் சிங்கிளாக அரபிக்குத்து பாடலை வெளியிட்டு ப்ரோமோஷன் வேலைகள் துவங்கப்பட்டது.. சிவகார்த்திகேயன் வரிகளில், அனிருத் இசையமைத்து, ஜோனிடா காந்தியுடன் இணைந்து பாடிய இந்த பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.

ஹலமதி ஹபிபோ பாடல் பான் வேல்ட் பாடலாக அனைவரையும் கவர்ந்து 63 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சோஷியல் மீடியாவில் பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி, வீடியோ வெளியிட்டு வருகின்றனர். உலக அளவில் குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட சர்வதேச பாடல்கள் பட்டியலில் அரபிக்குத்து பாடலும் இடம்பெற்றுள்ளது.

லேட்டஸ்ட் தகவலாக பீஸ்ட் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக அரபிக்குத்து பாடல் படத்தில் இடம்பெறவில்லையாம். படத்தின் இடையே எந்த இடத்திலும் அரபிக்குத்து பாடலை சேர்க்க முடியவில்லையாம். இருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த பாடலை நீக்க முடியாமல், ரசிகர்களின் கோரிக்கையின்படி படத்தின் இறுதியில் சேர்த்துள்ளார்களாம். ஆனால் இந்த தகவல் உண்மை தானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!