• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ் நிகழ்ச்சியில்கமவிடம் கால்ஷீட் கேட்ட ஐசரி கணேஷ்

வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய தனது மருமகனை கையோடு அழைத்துச் செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்திருந்தார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் டிரைலரையும் பிக் பாஸ் வீட்டில் கமல்ஹாசன் முன்னிலையில வெளியிட்டார்.வருணுக்கு மட்டுமின்றி இயக்குனராக வேண்டும் என்ற கனவில் இருக்கும்ராஜு உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தரப் போவதாக ஐசரி கணேஷ் நிகழ்ச்சியில் வாக்குறுதியை வழங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.


தனது மனைவி தாரிகா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போது இனிமே வாய்ப்பு தேடி அலைய தேவை இருக்காதுல்ல என ராஜு கேட்டது ரசிகர்களை ரொம்பவே நெகிழ வைத்தது. இயக்குநராக வேண்டும் என்கிற கனவோடு பல ஆண்டுகள் வாய்ப்பு தேடி வந்த ராஜு விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த நிலையில், பல சீசன்களாக முயற்சி செய்து இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

பிரியங்காவை நல்லா இருக்கியாம்மா என நலம் விசாரித்த ஐசரி கணேஷ் என்ன ராஜு கதை ரெடியா இருக்கா? என கேட்டு ராஜு எதிர்பார்த்திருந்த வாய்ப்பை நான் தருகிறேன் என அறிவித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நீங்க சொல்வீங்க, இந்த மேடையில் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நீங்கள் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கோரிக்கை வைக்க 4 பேர் முன்னிலையில் தான் அட்வான்ஸ் கொடுப்பார்கள். ஆனால், இவர் கோடி பேர் மத்தியில் அட்வான்ஸ் கொடுக்கிறார். கண்டிப்பாக பண்ணிடலாம் என பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி தனக்கு கேட் திறந்து வைத்திருக்கிறார் ஐசரி கணேஷ் என கமல்ஹாசன் பாராட்டினார்.