• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அட இவரும் விக்ரம் படத்துல நடிக்கிறாரா?

Byகாயத்ரி

Jan 7, 2022

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.


இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர். இவர்களின் கதாபாத்திரம் எப்படி இருக்குமென அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.மேலும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த கமல் மீண்டும் குணமடைந்து விக்ரம் பட ஷூட்டிங்கில் இணைந்தார்.

தற்போது படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கமல் மற்றும் லோகேஷ் உடன் நடிகர் சந்தன பாரதியும் உள்ளார்.மேலும் விக்ரம் படத்தில் அவர் கமலின் நெருங்கிய நண்பராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.