• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கொம்புவச்ச சிங்கம்டா படம் ஓடுகிறதா?

பொங்கல் அன்று வெளியான புதிய திரைப்படங்களில் சசிக்குமார் நடித்துள்ள கொம்புவச்ச சிங்கம்டா பல முறை ரீலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டு வெளியாகாமல் போன இந்தப் படம் பொங்கல் போட்டியில் ஐந்து படங்களுடன் ஒன்றாக தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளில் மூன்றில் ஒரு(375) பங்கு திரைகளில் வெளியிடப்பட்டு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உள்ளது திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் IMBDயில் கொம்புவச்ச சிங்கம்டா பட்டியலிடப்பட்டுள்ளது 50% இருக்கை அனுமதியில் படத்தின் வெற்றி சாத்தியமா என்கிற கேள்விகளுடன் கொம்புவச்ச சிங்கம்டா தமிழ்நாடு விநியோகஸ்தர் திருச்சி சண்முகத்திடம் பேசியபோது,

1992 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்திரைப்படங்களின் விநியோகஸ்தராக திருச்சி மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன் இப்போதுமுதன்முறையாக சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்றவரிடம்

சசிக்குமார் படங்கள் சமீப காலமாக வெற்றிபெறாத நிலையில் கொம்புவச்சசிங்கம்டா படத்தை என்ன நம்பிக்கையில் வாங்கி வெளியிட்டீர்கள்

ஏற்கெனவே எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் பெரிய வெற்றி. அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. எனவே இந்தப்படமும் வெற்றியாக அமையும் என்று நம்பினேன். அதோடு இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஏற்கெனவே தயாரித்த தடம், குற்றம் 23 ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருக்கிறதுசசிக்குமார் குடும்பங்கள் விரும்பும் கதாநாயகன் பொங்கல் பண்டிகை குடும்பங்களுடன் கொண்டாடும் திருநாள் இந்த பொங்கலுக்கு அந்தப் படம் மட்டுமே அதற்குரிய வகையில் இருந்தது அதனால் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையில் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறேன்

கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்ட கொம்புவச்ச சிங்கம்டா 50% இருக்கை அனுமதியில் வசூல் ஆககூடிய சாத்தியமா?

சாத்தியமானதுதான் 100% இருக்கை அனுமதி இருந்தபோது அது கொரோனாவுக்கு முன்பாக இருந்தாலும் பின்பாக இருந்தாலும் எல்லாப்படங்களுக்கும் 100% டிக்கட்டுகள் விற்பனை ஆவதில்லை பெரிய நடிகர்களின் படங்களுக்கு சில நாட்கள் 100% டிக்கட் விற்பனையாகும் பின்னர் 50% டிக்கட் விற்பனைக்கு போராட வேண்டி இருக்கும் இது தான் யதார்த்த நிலைமை பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் அதனால் கொம்புவச்ச சிங்கம்டா வெற்றிபெறும் என்கிற நம்பிக்கையுள்ளது

சிக்கலில் இருந்த கொம்புவச்ச சிங்கம்டா எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?

இங்கு எதையும் திட்டமிட்டு உரிய நேரத்தில் செய்தால் எந்த சிக்கலும் ஏற்படாது கொம்புவச்ச சிங்கம் டா அந்தபடத்தின் வியாபார வரம்பு இன்றைய சூழலை புரிய வைத்தோம் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி திட்டமிட்டபடிவெளியிட முடிந்தது நாங்கள் எதிர்பார்த்த
வருவாயும் திரையரங்குகளில் கிடைத்து வருகிறது

விநியோகஸ்தராக எதிர்கொண்ட சிக்கலான பிரச்சினைகள் பற்றி

பல நேரங்களில் எதிர்பாராத விதமாகப் பல சிக்கல்கள் வரும். பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை வாங்கி வெளியிட்டோம். வெள்ளிக்கிழமை படம் வெளியாகி நல்ல ரிப்போர்ட். வசூலும் பரவாயில்லை. அடுத்தடுத்த நாட்களில் பிக்கப் ஆகும் என்கிற நிலையில் திடீரென ஓர் அரசியல்தலைவர் கைது என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் திரையிடவே முடியவில்லை. அதனால் அப்படத்தை வெளியிட்ட எல்லா விநியோகஸ்தர்களும் நட்டத்தைச் சந்தித்தனர்.அதை இயக்கிய பா.இரஞ்சித் அடுத்து ரஜினிகாந்த் படம் இயக்கப்போனார். கார்த்திக்கும் நல்ல உயர்வு இருந்தது. படம் வாங்கிய விநியோகஸ்தர்கள்நாங்கள் பாதிக்கப்பட்டோம்.

இந்தப்படத்தை திருச்சியில் நீங்கள் வெளியிடாமல் வேறொருவருக்குக் கொடுத்தது எதனால்?

நான் படத்தயாரிப்பில் இறங்கவிருப்பதால் சென்னையில் அலுவலகம் போட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் திருச்சியில் கவனம் செலுத்தவியலாது. எனவே வேறொருவருக்குக் கொடுத்துவிட்டேன்.

வழக்கமான தயாரிப்பாளர்கள் பயந்துகொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் படத்தயாரிப்பில் இறங்குவது பற்றி..?

தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகள் விரிவடைந்திருக்கிறது அதே போன்று வியாபார முறைகள் மாறிவருகிறது படத்தயாரிப்புக்கு திட்டமிடும்போது அப்படத்தின் வியாபார வரம்பு அதற்குரிய பட்ஜெட் ஒதுக்கீடு என நடைமுறைப்படுத்தினால் எந்தப் படமும் எந்த சூழ்நிலையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தாது சினிமா நல்ல தொழில்தான்.திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்றார்

பொங்கல் அன்று வெளியான புதிய திரைப்படங்களில் சசிக்குமார் நடித்துள்ள கொம்புவச்ச சிங்கம்டா
பல முறை ரீலீஸ் தேதிஅறிவிக்கப்பட்டு வெளியாகாமல் போன இந்தப் படம் பொங்கல் போட்டியில் ஐந்து படங்களுடன் ஒன்றாக தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளில் மூன்றில் ஒரு(375) பங்கு திரைகளில் வெளியிடப்பட்டு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உள்ளது திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் IMBDயில் கொம்புவச்ச சிங்கம்டா பட்டியலிடப்பட்டுள்ளது 50% இருக்கை அனுமதியில் படத்தின் வெற்றி சாத்தியமா என்கிற கேள்விகளுடன் கொம்புவச்ச சிங்கம்டா தமிழ்நாடு விநியோகஸ்தர் திருச்சி சண்முகத்திடம் பேசியபோது

1992 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்திரைப்படங்களின் விநியோகஸ்தராக திருச்சி மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன் இப்போதுமுதன்முறையாக சசிகுமார் நடித்துள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டுள்ளேன் என்றவரிடம்

சசிக்குமார் படங்கள் சமீப காலமாக வெற்றிபெறாத நிலையில் கொம்புவச்சசிங்கம்டா படத்தை என்ன நம்பிக்கையில் வாங்கி வெளியிட்டீர்கள்

ஏற்கெனவே எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் பெரிய வெற்றி. அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. எனவே இந்தப்படமும் வெற்றியாக அமையும் என்று நம்பினேன். அதோடு இந்தப்படத்தின் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஏற்கெனவே தயாரித்த தடம், குற்றம் 23 ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றிருக்கிறதுசசிக்குமார் குடும்பங்கள் விரும்பும் கதாநாயகன் பொங்கல் பண்டிகை குடும்பங்களுடன் கொண்டாடும் திருநாள் இந்த பொங்கலுக்கு அந்தப் படம் மட்டுமே அதற்குரிய வகையில் இருந்தது அதனால் வெற்றி நிச்சயம் என்கிற நம்பிக்கையில் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறேன்

கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்ட கொம்புவச்ச சிங்கம்டா 50% இருக்கை அனுமதியில் வசூல் ஆககூடிய சாத்தியமா?

சாத்தியமானதுதான் 100% இருக்கை அனுமதி இருந்தபோது அது கொரோனாவுக்கு முன்பாக இருந்தாலும் பின்பாக இருந்தாலும் எல்லாப்படங்களுக்கும் 100% டிக்கட்டுகள் விற்பனை ஆவதில்லை பெரிய நடிகர்களின் படங்களுக்கு சில நாட்கள் 100% டிக்கட் விற்பனையாகும் பின்னர் 50% டிக்கட் விற்பனைக்கு போராட வேண்டி இருக்கும் இது தான் யதார்த்த நிலைமை பொங்கல் பண்டிகை தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் அதனால் கொம்புவச்ச சிங்கம்டா வெற்றிபெறும் என்கிற நம்பிக்கையுள்ளது

சிக்கலில் இருந்த கொம்புவச்ச சிங்கம்டா எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன?

இங்கு எதையும் திட்டமிட்டு உரிய நேரத்தில் செய்தால் எந்த சிக்கலும் ஏற்படாது கொம்புவச்ச சிங்கம் டா அந்தபடத்தின் வியாபார வரம்பு இன்றைய சூழலை புரிய வைத்தோம் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி திட்டமிட்டபடிவெளியிட முடிந்தது நாங்கள் எதிர்பார்த்த
வருவாயும் திரையரங்குகளில் கிடைத்து வருகிறது

விநியோகஸ்தராக எதிர்கொண்ட சிக்கலான பிரச்சினைகள் பற்றி

பல நேரங்களில் எதிர்பாராத விதமாகப் பல சிக்கல்கள் வரும். பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தை வாங்கி வெளியிட்டோம். வெள்ளிக்கிழமை படம் வெளியாகி நல்ல ரிப்போர்ட். வசூலும் பரவாயில்லை. அடுத்தடுத்த நாட்களில் பிக்கப் ஆகும் என்கிற நிலையில் திடீரென ஓர் அரசியல்தலைவர் கைது என்பதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் திரையிடவே முடியவில்லை. அதனால் அப்படத்தை வெளியிட்ட எல்லா விநியோகஸ்தர்களும் நட்டத்தைச் சந்தித்தனர்.அதை இயக்கிய பா.இரஞ்சித் அடுத்து ரஜினிகாந்த் படம் இயக்கப்போனார். கார்த்திக்கும் நல்ல உயர்வு இருந்தது. படம் வாங்கிய விநியோகஸ்தர்கள்நாங்கள் பாதிக்கப்பட்டோம்.

இந்தப்படத்தை திருச்சியில் நீங்கள் வெளியிடாமல் வேறொருவருக்குக் கொடுத்தது எதனால்?

நான் படத்தயாரிப்பில் இறங்கவிருப்பதால் சென்னையில் அலுவலகம் போட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதனால் திருச்சியில் கவனம் செலுத்தவியலாது. எனவே வேறொருவருக்குக் கொடுத்துவிட்டேன்.

வழக்கமான தயாரிப்பாளர்கள் பயந்துகொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் படத்தயாரிப்பில் இறங்குவது பற்றி..?

தமிழ் சினிமாவின் வியாபார எல்லைகள் விரிவடைந்திருக்கிறது அதே போன்று வியாபார முறைகள் மாறிவருகிறது படத்தயாரிப்புக்கு திட்டமிடும்போது அப்படத்தின் வியாபார வரம்பு அதற்குரிய பட்ஜெட் ஒதுக்கீடு என நடைமுறைப்படுத்தினால் எந்தப் படமும் எந்த சூழ்நிலையிலும் நஷ்டத்தை ஏற்படுத்தாது சினிமா நல்ல தொழில்தான்.திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.