• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஸ்ரேயா அரச பரம்பரையா?

நடிகை ஸ்ரேயா சரண் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவராக பான் இந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் சிறு கதாபாத்திரம் மூலமாக கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். ரஜினிகாந்த், ஜெயம் ரவி, விக்ரம், விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி உள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது..

இந்நிலையில் தற்போது, கன்னடத்தில் உருவாக உள்ள பான் இந்தியா படமான கப்ஸா திரைப்படத்தில் மதுமதி என்ற அரசு குடும்ப கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உபேந்திரா ஹீரோவாக நடிக்க சுதீப் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகிறது.

இந்த கதாபாத்திரம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஸ்ரேயா, எனது திறமையை வெளிப்படுத்த இந்த படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. படத்தின் கதையும் அழகாக அமைந்துள்ளது. பெங்களூருவுக்குத் திரும்பி, மீண்டும் ஒரு கன்னடப் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகரத்தையும் இங்குள்ள மக்களையும் நான் விரும்புகிறேன் என்று ஸ்ரேயா கூறினார்.

ஸ்ரேயா இதற்கு முன்பு புனித் ராஜ்குமார் நடித்த கேமியோவில் நடித்துள்ளார், பின்னர் சந்திரா படத்திலும் பிரேமுடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்தில் பாதாள உலக மன்னனாக நடிக்கும் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் 1940கள் மற்றும் 1980 களுக்கு இடைப்பட்ட காலத்தைக் கொண்ட கதையாகும். மேலும், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் ஸ்ரேயா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.