

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் செல்வராகவன்.. தற்போது சாணிகாயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்த நேர்காணல் ஒன்றில் அவர் கூறுகையில், “தனுஷை வைத்து படம் இயக்குவது மிகவும் சவாலாக இருக்கிறது. அவர் இப்போது முன்பு மாதிரி இல்லை..தனுஷிடம் நான் நிறைய மாற்றங்கள் கண்டுகொண்டேன் … அவருக்கு 16 வயது இருக்கும்போது நான் துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தேன். அப்போது அவருக்கு ஓன்றுமே தெரியாது.. நிறைய தப்பு வரும்.
இப்பொது நான் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறேன்..இந்த திரைப்படத்தின் போட்டோஷூட் எடுக்கும்போது தனுஷிடம் இருந்து நிறைய மாற்றங்கள் பார்த்தேன்.. நான் எப்படி நினைக்கிறேனோ அதே மாதிரி அவரும் செய்துவிடுகிறார். நான் முதலில் பார்த்த தனுஷ் வேற இப்ப பாக்குற தனுஷ் வேற” என கூறியுள்ளார் செல்வராகவன்.
நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
