தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் பெரிய மாவட்டமாக இருப்பதாகவும், இதனை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, அந்தியூர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளை உள்ளடக்கி மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதிக பரப்பளவு கொண்ட மேட்டூரில் இருந்து சேலத்திற்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆவதாக தெரிவித்த அவர் நிர்வாக வசதிக்காக மேட்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.