• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய தொகையை 1500 கூறிவிட்டு, தற்போது 1,200 வழங்குவது நியாயமா? ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்!

கப்பலூர் டோல்கேட்டை தேர்தல் வாக்குறுதிபடி அகற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவிட்டால் எடப்பாடியாரின் அனுமதியை பெற்று மக்களை திரட்டி போராட்டம் செய்வோம். தேர்தல் அறிக்கையில் ஓய்வூதிய தொகையை 1500 ரூபாய் வழங்குவோம் என்று கூறிவிட்டு தற்போது 1,200 ரூபாய் வழங்குவது நியாயமா? ஆர். பி.உதயகுமார் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி.உதயகுமார்,

மதுரையில் தென்பகுதி நுழைவாயிலாக திருமங்கலம் உள்ளது .குறிப்பாக எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு,  பல்வேறு நலத்திட்டங்களை செய்தார். கள்ளிக்குடியில் புதிய வட்டம், திருமங்கலத்தில் புதிய கோட்டம், அதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்கள், 116 ஊராட்சிகள், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகள், இரண்டு பேரூராட்சியில் உள்ள 30 வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள், புதிய கிராம இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை எடப்பாடியார் செய்து கொடுத்தார்.

மேலும் எடப்பாடியார் ஆட்சியில் தான் திருமங்கலம் யூனியன் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசு விருது பெற்று இதற்காக 25 லட்ச ரூபாயை பரிசாக பெற்றது. அதேபோல் கல்லுப்பட்டி பேரூராட்சியும் சிறப்பு விருந்தினை பெற்றது. திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கட்டிடங்கள், கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தரப்பட்டது. 

அது மட்டுமல்ல  அம்மாவின் அரசு மக்களின் பிரதான கோரிக்கையான திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையத்தை உருவாக்கிட, நான்கு வழிச்சாலையில் இரண்டடுக்கு பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடியார் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்த பணி கோரப்பட்டது. அதனை தொடர்ந்து திமுக ஆட்சி வந்த உடன் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

 அதேபோல் திருமங்கலத்தில் ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அம்மா ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

 இதனைத் தொடர்ந்து  மக்கள் பிரதான கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. மத்திய அமைச்சர் நிதி கட்காரி ஆறு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுங்க சாவடி அகற்றப்படும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற முதலமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றுவோம் என்று முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

 அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நினைவூட்ட முதலமைச்சர் கடந்து செல்லும் பொழுது மக்கள் மனு கொடுக்க நின்றபோது அரசு கூட விடவில்லை. இதனால் மக்கள் வேதனைப்பட்டனர் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் எந்த நடவடிக்கை இல்லை.

 எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் வானங்கள் முறையாக கையாளும் வகையில் பல்வேறு சலுகைகள் பெற்று தரப்பட்டது. ஏற்கனவே உங்கள் தொகுதி முதலமைச்சர் என்ற திட்டத்தில் 10 கோரிக்கையில் இதுவும் பிரதான கோரிக்கையாக நான் கொடுத்துள்ளேன்.

 கப்பலூர் டோல்கேட் குறித்து நான் மக்களிடம் மனுககளை வாங்கும் பொழுது ஒரு நாள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கும் நிலுவையில் தான் உள்ளது.  தொடர்ந்து எதிர்கட்சி தொகுதிகளை பாராபட்சம் காட்டி வஞ்சிக்க கூடாது இது ஜனநாயகத்திற்கு அழகல்ல 

திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை, 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது 1200 ரூபாய் தான் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1,500 ரூபாய் வழங்க அரசுக்கு மனம் வரவில்லை. இதே அம்மா ஆட்சி காலத்தில் 500 ரூபாயாக இருந்த உதவி தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது திமுக ஆட்சியில் 1200 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது ஆனால் அம்மா ஆட்சி காலத்தில் 4,200 கோடி ஒதுக்கப்பட்டது  அதாவது கூடுதலாக 3000 கோடி இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.

ஒரு கோடி பேருக்கு மகளிர் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பல்வேறு நிபந்தனைகள் குறித்து பாரமுகம் காட்டப்பட்டு வருகிறது. திமுக கட்சியினருக்கு மட்டும்தான் வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு போக வேண்டியது தானே? சோறு என்று பேப்பர் எழுதினால் சாப்பிட முடியுமா? சமைத்தால் தான் சாப்பிட முடியும். அதுபோல் இன்றைக்கு இந்த அரசு விளம்பர வெளிச்சத்தில் உள்ளது.

கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் எடப்பாடியார் அனுமதியை பெற்று தமிழக அரசுக்கு எதிராக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் கூறினார்.