• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அரியலூர் மாவட்ட பாஜக நிர்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

ByKalamegam Viswanathan

Nov 29, 2026

அரியலூர் மாவட்டம் திருமானூர் கிழக்கு ஒன்றியம் மேல வரப்பன் குறிச்சி கிராமத்தை சேரந்த அர்சுனன் மகன் பழனியப்பன் (50) இவர் விவசாய தொழிலாளி மேலும் பாஜக மண்டல பொது செயலாளராக உள்ளார்.

இவருக்கு பரமேஸ்வரி (வயது 45) மனையையும் திவ்யா, தீபிகா என இரு மகள்கள் உள்ளனர்.

பழனியப்பன் மகள் திவ்யாவிற்கு வரும் பிப்ரவரி மாதம் 10 ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பழனியப்பன் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை காண பாஜக நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் வந்ததாக கூறப்படுகிறது

தீபம் ஏற்றிய பின் கிரிவலம் சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தவர் முதலுதவி சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார் பரிசோதனையில் அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறப்படுகிறது.

அதனையடுத்து பழனியப்பன் உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.

திருப்பரங்குன்றம் தீபத் தூண் தீபவிழாவை காண வந்த
பாஜக நிர்வாகி மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

இன்னும் மூன்று மாதங்களில் தனது மகள் திவ்யாவிற்காக திருமண ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் பழனியப்பன் மரடைப்பால் மரணம் அடைந்த செய்தி குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை அளித்துள்ளது