• Tue. Nov 29th, 2022

அழகுநிலையம் சாதகமா…??? பாதகமா..??

Byகாயத்ரி

Oct 7, 2022

அழகு என்றால் ஆன்மாவும் வாயை பிளக்கும். அப்படி அழகு படுத்திக்கொள்ள சில விஷயங்களை ஆண்கள், பெண்கள் கையாளுகின்றனர் இது எந்த அளவிற்கு சரி, தவறு என்று நாம் அளசி ஆராய்வோம். இதுபற்றி தெரிந்துகொள்ள மாலதியிடம் சில கேள்விகள் முன்வைத்தோம். இதோ உங்களுக்காக…

மாலதி

மருதாணி வைப்பதால் என்ன பலன்..??

மருதாணி வைப்பதால் நம் உடல் சூடு தணிந்து உடலை குளர்விக்கிறது. உடலில் இருக்கும் பித்தம் குறைப்பதற்கு மருதாணி போடுவது சிறந்த வழி. அதுமட்டுமின்றி கை, கால்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கும் இது சிறந்த தீர்வு. மருதாணி அழகுப்படுத்திக்க மட்டுமல்ல உடலின் நன்மைக்கும் தான். ஆனால் கடையில் வாங்காமல் வீட்டில் இயற்கை முறையில் தயாரித்து வைப்பது நல்லது. கையளவு மருதாணி தழை, எலுமிச்சை சாறு, டிகாஷன்தூள் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து அரைத்து வைத்தால் அத்தனை சூடும் பறந்துவிடும். இதற்கு சிறிது நேரம் ஒதுக்கி வாரம் ஒருமுறை போட்டாலே போதுமானது.

தொட்டதுக்கெல்லாம் அழகுநிலையம் ஏன்..?? இது எந்த அளவிற்கு நன்மை..?

அழகுநிலையம் போவது நன்மையே..!! பலரும் சுழன்று ஓடிகொண்டிருகுகும் காலகட்டத்தில் நேரமின்மையால் அழகுநிலையம் போக வேண்டிய கட்டாயம். அதிலும் ஒரு தேர்ந்தவர் செய்தால் இன்னும் பார்க்க எடுப்பாக இருக்குமே என்ற எண்ணம் தான் பல மக்களை இழுத்து செல்கிறது. தன்னை மெருகேற்ற அழகுநிலையம் செல்வது நல்லது தான்.

முக அழகுக்காக சர்ஜரி அவசியமா..??

சர்ஜரி எடுத்துக்கொள்வது ஆபத்தே.. முதலில் காஸ்மெடிக் சர்ஜரி என்று தனியாக இருந்தது. இப்போது புருவத்திற்கு, உதட்டுக்கலாம் சர்ஜரி வந்துவிட்டது. அந்த நேரத்தில் வயது இருப்பின் அது அழகாக தெரியும்.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதில் உள்ள வேதிப்பொருள் கெடுதலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. மூன்று அடுக்குகளாக இருக்கும் நம் சருமத்தில் வேதிப்பொருள் நிறைந்ததை செலுத்தினால் கட்டாயம் ஆபத்தை விளைவிக்கும். எனவே, சர்ஜரிகளை தவிர்ப்பது நல்லது.

அழகை மெருகேத்த இயற்கை முறையா அல்லது மார்டன் முறையா..??

இயற்கை முறைதான் உடலுக்கும் சருமத்திற்கும் நல்லது. பார்லர் சென்று ஃபேஷியல் செய்வதைவிட, வீட்டில் உள்ள பழங்கள், காய்கறிகளிலே பல சத்துக்கள் உள்ளது. உதடு சிகப்பாக எந்த மருத்துவமும் தேவையில்லை .. ஒரு பீட்ரூட் போதும்.. தொடர்ந்து அதன் சாரை உதட்டில் போட்டு வந்தால் உதடு கருப்பாகாமல் இருக்கும். வீட்டிலே அதற்கான பொருட்களை வைத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. அப்படி இல்லையெனில் ஹெர்பல் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் போதும் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கலாம். இதில் உடனடியாக தீர்வு கிடைப்பது அரிது. அதை நாம் தினமும் செய்து வந்தால் தான் விடை கிடைக்கும். ஆனால் நிச்சயம் வேறுபாடுகள் தெரியவரும். பொறுமை தான் இதில் அவசியம்.

லேசர் சிகிச்சையில் பக்கவிளைவுகள் இருக்கிறதா..???

லேசர் சிகிச்சை நிரந்தரம் அல்ல. அது ஒருவரின் உடல் வாகு பொருத்து மாறுபடும். ஒருவருக்கு 6 மாதத்திற்கு ஒரு முறையாவது லேசர் செய்ய வேண்டிய கட்டாம் இருக்கும். இந்த லேசர் சிகிச்சையால் பக்க விளைவுகள் வர வாய்ப்புகள் அதிகம். வயதாக சருமத்தில் வேறுபாடுகள் தெரியும். அதற்கு பதில் வேக்ஸிங் ஒரு நல்ல வழி. அது மாதத்திற்கு 1 முறை பண்ணாலே போதுமானது. அதில் வலி மிகவும் குறைவு மற்றும் விளைவுகள் எதுவும் இருக்காது. இது சருமத்திற்கும் எந்த தீங்கும் தராது. வெயிலில் இருந்து சரமத்தை காப்பதே இந்த முடி தான், அதனால் அதை எடுப்பது வாடிக்கையாக்காமல் இருத்தல் நல்லது.

அழகு படுத்துதல் முக்கயமானதா..??

ஆள் பாதி ஆடை பாதி என்று சொல்வார்கள். அது 100 சதவீதம் உண்மை. ஏனென்றால் ஒருவர் நம்மிடம் பேசகிறார் என்றால் அவர்கள் முதலில் கவனிப்பது நாம் க்ரூம் (அழகு படுத்திக்கொள்ளுதல்) ஆகி இருக்கோமா என்று தான்.. இதுவும் இந்த காலத்தில் அத்தியாவசியம் ஆகிவிட்டது. நாம் அணிகின்ற உடை, அணிகலன், ஹேர் ஸ்டைல், ஹேர் கலர், ஹேர் பேன்ட் முதல் கால் விரல் வரை என்ன அணிந்திருக்கிறோம் என்பது தான் உற்று நோக்கப்படுகிறது. ஆதலால் நாம் நம்மை கண்டிப்பாக அழகு படுத்துதல் முக்கியமே..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *