• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

உருவாகிறதா தமிழக முதல்வரின் பயோபிக்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுப்பதற்கான வேலைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வராக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 1975 களில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த அவர், திமுகவில் பல பதவிகளை வகித்து தற்போது முதல்வராகியுள்ளார். இந்நிலையில் அவரின் பயோபிக் திரைப்படத்துக்கான வேலைகள் தற்போது நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் இயக்க உள்ளதாகவும், மு.க.ஸ்டாலின் வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இசையமைப்புப் பணிகளை ரஹ்மான் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான கதை மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதில் இருந்து தற்போது முதல்வராகியிருப்பது வரையிலான காலகட்டம் வரை அமையும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த கதையை படமாக்குவதற்கான அனுமதியை முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.