தேனி கானா விளக்கு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் முறைகேடு செய்வதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கானா விளக்கு பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த அரசு மருத்துவமனைக்கு, தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து தினந்தோறும் ஏராளமான உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று சிகிச்சை முடித்து வீட்டுக்கு செல்வதற்கு மருத்துவர் 7 நாட்களுக்கு மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்.
அப்போது மாத்திரை வாங்க சென்ற நபரிடம் 7 நாட்களுக்கு மாத்திரை வழங்காமல் 5 நாட்களுக்கு மட்டும் மாத்திரை வழங்கினார்.
இதனால் மாத்திரை வாங்கிய நபர் மருந்து மாத்திரை வழங்கக்கூடிய நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை கண்ட மேலும் அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கி வந்த ஏராளமான பொதுமக்கள் எங்களுக்கும் மாத்திரைகள் குறைவாகவே வழங்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு காண விளக்கு மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் நோயாளிகளுக்கு குறைவாக வழங்குவதாக குற்றம் சாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.













; ?>)
; ?>)
; ?>)