தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது திருமண நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடக்காது என சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பெண்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்; குறிப்பாக குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கரூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் திருமண நிதியுதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இனி நடக்காது என்ற கீதாஜீவன் இதற்காக சமூக நலத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொரிவித்தார்.
- விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம்..,
- நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தித்தர கோரிக்கை..,
- மணமக்களை சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை.,
- சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்..,
- காலாவதியான பாட்டில்கள் விநியோகம்..,
- போதிய பராமரிப்பு இல்லாத காற்றாலைகள்..,
- சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி..,
- விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழா..,
- மருது சகோதரர்கள் மாலை அணிவித்து மரியாதை..,
- புண்வாரி அலுவலகத்தில் ஊழல் முறைகேடு..,













; ?>)
; ?>)
; ?>)