மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதன் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள பட்டதாரி இளைஞர் ஒருவரின் வீட்டில் சந்தேக அடிப்படையில் மதுரை தெற்கு துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று மாலை தொடங்கி 15 மணி நேரமாக தொடர்ந்து தீவிர சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது பட்டதாரி இளைஞரின் தந்தையிடமும் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதும் குறிப்பிடதக்கது*