மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் உமா பாஸ்கர் வரவேற்புரை ஆற்றினார் கல்லூரிச் செயலாளர் முனைவர் பி .அசோக் குமார் தலைமைவகித்தார். இயக்குனர் அ.சத்தி பிரனேஷ், கல்விப் புலத் தலைவர் செந்தூர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஊக்கமளிக்கும் பேச்சாளர், முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றினார்.

இன்றைய இளம் தலைமுறையினரின் கலாச்சாரம் மற்றும் இடைவெளி குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும்பெண் சாதனையாளர்களைப் பட்டியலிட்டு அவர்தம் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைத்தார்.
மேலும் ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும் என்றும் மாணவர்களாகிய தெய்வங்கள் அமர்ந்துள்ள கல்வி என்னும் தேரினை இழுப்பதற்கு இருவடங்களாக பெற்றோர் மற்றும் ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற நல்ல உதாரணத்தையும் அழகு தமிழில் எளிய நடையில் அனைவரின் மனதிலும் பதியும்படி உரையாற்றி பெற்றோர்களையும் மாணவர்களையும் வாழ்த்திச் சென்றார்.
மாணவர்களுக்கு தேவையான தகவல்களை துறைத் தலைவர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்வின் இறுதியாக ஆங்கிலத்துறை தலைவர் ஈ.பிரதிபா நன்றி உரையாற்றினார்.