ஜெம் மருத்துவமனையில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு, பெருங்குடல் புற்றுநோய் ஆதரவு குழு மற்றும் சிறப்பு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, லாப்ரோஸ்கோப்பி துறையில் உலக அளவில் தனித்துவம் கொண்ட மையமாகவும் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கான நவீன தீர்வுகளை வழங்கக் கூடிய இந்தியாவின் முன்னணி சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கும் கோவை ஜெம் மருத்துவமனை சார்பில், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்தியேக ஆதரவு குழு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான நம்பகத்தன்மையான தகவல்களை பெற சிறப்பு உதவி எண் (9994901000) ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த குழு மற்றும் உதவி எண்ணை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சரவண சுந்தர், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் பி. பிரவீன் ராஜ், பெருங்குடல் அறுவை சிகிச்சைத் தலைவர் டாக்டர் ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார். பெருங்குடல் புற்றுநோய்க்கு ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இந்த நோயை வென்ற மக்களுடன் இணைந்து இந்த ஆதரவுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் இவ்வித புற்றுநோய் குறித்தும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தம் ஒருவர் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த குழு மூலம் இந்த நோய்க்காக சிகிச்சை பெறுபவர்களுக்கு மன ஆதரவை, சரியான தகவல்களையும், நம்பிக்கையை வழங்குவதுவே இதன் முக்கிய குறிக்கோள்.
இந்த நிகழ்வில் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. காவல் ஆணையர் உடன் இனைந்து டாக்டர் பழனிவேலு இந்த விருதுகளை வழங்கி அவர்களை வாழ்த்தினார். பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கையின் ஒரு பகுதியாக, ஜெம் மருத்துவமனை மாவட்டங்கள் முழுவதும் பரிசோதனை திட்டங்கள் மற்றும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் டாக்டர். சத்தியமூர்த்தி, டாக்டர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.