கடலில் காணாமல் போகும் மீனவர்களை உயிருடன் மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருடன் யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
தினேஷ், CEO யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம் பேட்டி..,
இந்தியாவின் முன்னணி டிரோன் உற்பத்தியாளர் என்ற பெருமை பெற்ற யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருடன் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதன் மூலம் டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடற்கரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், காலநிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுடன் மாயமாகுவது வழக்கம். இந்த நிலையில் தொலைந்த மீனவர்களை கண்டறிந்து மீட்பு செய்ய உயர் தர டிரோன் கண்காணிப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சேவை செயல்படுத்தப்பட உள்ளதால், கடலில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அதி நவீன ட்ரோன் மூலம் கண்காணித்து மீனவர்களை மீட்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் கடல் வழிப் போக்குவரத்து கண்காணிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நடவடிக்கைகள் 24/7 கண்காணிப்பு வசதியுடன் இந்த டிரோன் கண்காணிக்க உள்ளது.