• Sat. Jan 31st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

த. வெ. க நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேட்டி..,

BySeenu

Jan 31, 2026

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம் விஜய் சினிமாவில் சிறந்த நடிகர், அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த செங்கோட்டையன்,
சினிமாவில் இருந்து எம்ஜிஆர் மூன்று முறை முதல்வர் ஆகியுள்ளார், ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்துள்ளார் எனவும் திரைபடத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்.டி.ஆர் ஆகியோர் உருவாக்கி காட்டினர் . இப்போது இருக்கின்ற நிலை
திமுக , TVK இடையேதான் போட்டியேதான் தவிர, அதிமுக என்ற இயக்கம் எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை போன்ற நிலை இல்லை எனவும் தெரிவித்தார்.

பிரதமர் வந்த போது NDA கூட்டணி கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை எனவும், யாரை நம்பி இவர் கட்சி நடத்துகின்றார் எனவும், எடப்பாடி பழனிச்சாமி முகத்திற்கா ஓட்டு போடுகின்றனர், அந்தளவு செல்வாக்கு மிக்கவரா இவர் எனவும் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறும் இல்லை எனவும், அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது எனவும், அதை உணராமல் இருக்கின்றார் என தெரிவித்தார்.

செல்வாக்கு மிக்க தலைவரை , மக்கள் விரும்பும் தலைவராக இருக்கும் பற்றி பேசுவதை ஏற்க முடியாது எனவும் ஆண்டிற்கு 500 கோடி ரூபாயை விட்டு மக்களுக்காக பணியாற்ற களமிறங்கி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். அதிமுக, திமுக என யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்களின் மனைவி,மகன்,மகள் என அனைவரும் புதியதாக வந்துள்ள tvk தலைவர் விஜய்க்குதான் வாக்கு என்று செல்லும் நிலை இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.எங்களது சர்வே மூலமாக தெரிந்து கொண்டது, இப்போது
40 % வாக்கு எங்களுக்கு இருக்கிறது எனவும் தெரிவித்தார்

இது வரை சொல்லாத வார்த்தையை இப்போது ஏன் எடப்பாடி சொல்லுகின்றார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் எனவும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது , தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள் , அப்போது நேரில் சென்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பார்த்தாரா எனவும் கேள்வி எழுப்பினார். அங்கு100 நாள் நடந்த போராட்டத்திற்கு அமைச்சர்கள் யாராவது பேச்சுவார்த்தைக்கு போனார்களா எனவும் கேள்வி எழுப்பிய அவர், இப்போது அதையும் இதையும் பேசிக்கொண்டு இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். இவர் முதல்வராக இருந்த பொழுது தூத்துக்குடி சென்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றது, அந்த சம்பவம் காலையில்தான் தனக்கு தெரியும் என்கின்றார் முதல்வராக இருந்தவர் என தெரிவித்த அவர், இவர் எத்தனை முறை அம்மாவிடம் சென்று இருக்கின்றார் எனவும், எடப்பாடி எப்படி முதல்அமைச்சர் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என நாட்டிற்கு தெரியும் எனவும் , அப்படி இருக்கையில விஜயை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்பட்டதா என்ற கேள்விக்கு ,
பொதுவாக அந்த முடிவுகளை தலைவர்தான் மேற்கொள்ள வேண்டும் எனவும், இதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார். அதிமுகவில் இருப்பவர்கள் ,பல பேர் பல கருத்துகளை சொல்வதை போல நாங்கள் சொல்வதில்லை எனவும், அங்கு ஒவ்வொரு வரும் ஒரு கருத்தை சொல்லுவார்கள் எனவும், எங்களைப் பொருத்தவரை தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதன் அடிப்படையில் பயணம் மேற்கொண்டு இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். எந்த கேள்வியாக இருந்தாலும் தெரிந்தவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்தாக இருக்கின்றதே தவிர,
அதிமுகவில் “தெர்பாகூலர் ” பல்வேறு கருத்துகளை சொல்வதை போல நாங்கள் சொல்ல முடியாது எனவும், விஜய் நாளைய முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.