திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி கலந்து கொண்டு பேசினார்.
இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் காடேஸ்வரா சுப்பிரமணி,
திண்டுக்கல்லை சுற்றியுள்ள வக்கம் பட்டி, பெருமாள் கோயில் பட்டி , பஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இந்து கோவில்களில் இந்துக்கள் வழிபாடு நடத்த முடியவில்லை .
இந்து கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் வேற்று மதத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை
இந்து திருவிழாக்களுக்கு பயன்படுத்த முடியவில்லை.

நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் ஆட்சியாளர்கள் அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். இந்த கிராமங்களில் அதிக அளவில் கிறிஸ்தவர்கள் உள்ளதால் இந்துக்கள் ஊரை விட்டு வெளியேறி சென்று விட்டனர்
மீதமுள்ளவர்களை மதமாற்றுவதற்கு கிறிஸ்தவர்களுக்கு பெருந்தொகை வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பெருமாள் கோயில் பட்டி என்ற ஊரின் பெயரை அந்தோணியார் புரம் என அங்குள்ள கிறிஸ்தவர்கள் மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இஸ்லாமிய கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுகிறார். இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாவிட்டாலும் பரவாயில்லை பண்டிகைகளை திருவிழாக்களை கொண்டாட தடை விதிக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுகளை திமுக அரசு நடைமுறைப்படுத்த மறுக்கிறது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கன்னியாகுமரியில் நடந்த தேர்த் திருவிழாவில் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு சேகர் பாபு ஒரு கிறிஸ்தவர் அவரை இந்து சமய அறநிலைத்துறைக்கு அமைச்சராக திமுக வைத்துள்ளது.
அவர் எப்படி இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பார்.
தமிழகம் முழுவதும் அதிக அளவில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டதாக திமுக கூறி வருகிறது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு,
ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு அந்த ஊரைச் சேர்ந்த பெரும் முதலாளிகள் நன்கொடையாளர்கள் கோடிக்கணக்கில் கொட்டி கொடுக்கின்றனர்.
இந்தப் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே திமுக அரசு கும்பாபிஷேகங்களை நடத்துகிறது. ஆனால் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ள கிராம கோவில்களை இந்த அரசு கண்டு கொள்வதில்லை.
திண்டுக்கல் மலைக்கோட்டை மீது அமைந்துள்ள பத்மகிரீஸ்வரர் கோவிலில் சிலைகளை மீண்டும் பிரதிஷ்டி செய்வதற்கு எந்த கட்ச வாக்குறுதி அளிக்கிறதோ
அந்த அரசியல் கட்சிக்கு இந்துக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் ..
மீண்டும் மலை மீது அம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு இந்து முன்னணி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்திலேயே திமுக அரசு பற்றி அனைத்து இந்துக்களும் புரிந்து கொண்டனர்.
தற்பொழுது திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் மற்றும் இந்துக்கள் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து நாங்கள் தீபத்தை கண்டிப்பாக ஏற்றுவோம் என்று ஒவ்வொரு நாளும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மீண்டும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் கண்டிப்பாக ஏற்றப்படும் அதற்கு இந்து முன்னணி தொடர்ந்து பாடுபடும். என பேசினார்.




