• Sat. Apr 20th, 2024

சேலத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடைபெற்ற சூப்பர் உமன் மினி மாரத்தான் போட்டியில் திரளான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பங்கேற்றனர்.
ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பெண் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் விதமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பில் சூப்பர் உமன் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது . 
இந்த போட்டியை இந்திய மகளிர் தேசிய கூடைபந்து அணி முன்னாள் தலைவர் அனிதா பால் துரை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மெய்யனூர் பகுதியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி ஐந்து ரோடு , சாரதா கல்லூரி வழியாக 5 கிலோமீட்டர் கடந்து மீண்டும் மெய்யனூர் பகுதியில் நிறைவு பெற்றது. இதில் ஐந்து வயது பெண் குழந்தைகள் முதல் 50 வயது வரையிலான பெண்கள் கலந்துகொண்டு ஓடினர்.தொடர்ந்து இரண்டு கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் பெண் குழந்தைகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓடினர் தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *