ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா செயலர் திலீபன்ராஜா தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாணவி செல்வராணி வரவேற்பு நடனம் ஆடினார். மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேச்சு, பாட்டு, கவிதை, நடனம் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி பாலகிருஷ்ணன் பேசுகையில் “உலகமே இன்று மகளிர் தினத்தை மிகச்சிறப்பாக உணர்ந்து கொண்டாடுகிறது. பல துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். ஆண்களுக்குப் பெண்கள் சமம் என்ற கருத்து இன்றைக்கு நிரூபிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மாணவிகள் சீதாலட்சுமி, தங்கமீனா, முனியாண்டி குழுவினர் நடனம் ஆடினர். முதலாமாண்டு ஜெயசுதா குழுவினர் சேர்ந்து பெண்களுக்குரிய பருவங்களை விளக்கி வருணித்து நடனம் ஆடினர்.

பிற்பகல் 2-மணியளவில் மாணவ, மாணவிகளின் சிந்தனையயைத் தூண்டும் மாபெரும் பட்டிமன்றம் “குடும்பப் பிரச்சனைகளுக்குப் பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா?” என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பட்டிமன்ற நாவலர் திரு.செ.பாலகிருஷ்ணன் அவர்கள் நடுவராகப் பதவி வகித்தார். “ஆண்களே! என்ற தலைப்பில் கவிபிரபா, ஜெயசுதா, முனீஸ்வரி பேசினார்கள். பெண்களே! என்ற தலைப்பில் மாணவர்கள் சிவா, பால்ராஜ், ராஜதுரை பேசினார்கள் இறுதியாக, நடுவர் பயனுள்ள கருத்துக்களைக் கூறி குடும்பப் பிரச்சனைக்கு பெரிதும் காரணமாக இருப்பவர்கள் ஆண்களே! என்று தீர்ப்பு வழங்கி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார்.
அனுஷ்யா, பிரியங்கா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள். கவிதா நன்றி கூறினார். அனைவரையும் கல்லூரி நிர்வாக அதிகாரி தர்மராஜூ அவர்கள் வாழ்த்திப் பேசினார்.














; ?>)
; ?>)
; ?>)