• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மனநலம் குறித்த சர்வதேச மாநாடு

Byஜெ.துரை

Feb 7, 2023

சென்னை சமூகப் பணி கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த தன்னாட்சி நிறுவனம் மனநலம் ஒரு முழுமையான அணுகுமுறை என்ற சர்வதேச மாநாடு.
மனநலம் ஒரு முழுமையான அணுகுமுறை என்ற தலைப்பிலான மூன்று நாள் பன்னாட்டு மாநாடு சென்னை சமூகப்பணி கல்லூரியின் உளவியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.இதன் தொடக்க விழாவை கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் ராஜா சாமுவேல் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து துறை தலைவர் முனைவர் சுபஸ்ரீ வனமாலி வரவேற்புரை ஆற்றினார்.கே.ஏ மாத்யூ இ.ஆ.ப(ஓய்வு) தலைமை உரை ஆற்றினார்.இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேரராசிரியர் முனைவர் எஸ்.கெளரி, ஊரக வளர்ச்சி துறையின் ஆணையர் முனைவர் தாரேஜ் அகமது, ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்