தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
தமிழ்நாட்டின் பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்
தமிழக முதலமைச்சர் வேளாண்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களை அனுப்பி வைத்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் ஒன்றேகால் லட்சம் (ஹெக்டர்) விலை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். 5 லட்சம் ஏக்கர்களுக்கு 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கின்ற விலை நிலங்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிக்கை அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும்.ஹெக்டருக்கு 35 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் மற்றும், ஒரு வாரம் மறுகனக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த அறிக்கையை கண்டு தமிழக விவசாயிகள் திகைத்துப் போய் இருக்கிறார்கள் எனவும் கூறினார்.காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது எனவும் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றி வணிக நோக்கத்தோடு லாபத்தை ஈட்டுவதாகவும். தமிழக முதலமைச்சர் இழப்பீடு முழுமையாக கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
பிரதமருக்கு கடிதம் எழுதுவதாக கணக்கு காட்டி கொள்முதல் செய்த நெல்லை நிறுத்தி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது ஈரப்பதத்தை கணக்கில் காட்டி கொள்முதலை நிறுத்தி வைப்பதற்கு உரிமை கிடையாது உடனடியாக நிபந்தனை இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டுமென கூறினார்.18 % ஈரப்பதம் கொண்டு உளர்ந்த நெல்லை காலம் தாழ்த்தி வைத்து 20 சதவீதம் வரை ஈரப்பதம் வகைக்கும் வரை காலம் தள்ளியதிற்க்கு தமிழக அரசு பொருப்பு ஏற்றுக்கொள்ள் வேண்டும்.திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறதாக அவர் கூறினார்.