தமிழக முதலமைச்சர் கூட்டணி தர்மத்தை மீறி பொறுப்பேற்ற திமுக உடன்பிறப்புகளை பதவி விலக சொல்லியும் அமைதியாக இருக்கும் உடன்பிறப்புகளை களை எடுக்க திமுக தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுகவைச் சேர்ந்த சாம்சத் பேகம் போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். அவரை ராஜினாமா செய்யக்கோரி கடலூர் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் வற்புறுத்தியும், அவர் மறுத்து விட்டார். இதே போல தேனி அல்லிநகரத்திலும் திமுக வேட்பாளர் ரேணுப்ப்ரியா நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் அந்த நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.ஆனால் கூட்டணி தர்மம் மதிக்கப்படவில்லை. தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் நேரில் சென்று நேரம் வழங்கியும் யாரும் அதற்கு செவி சாய்க்கவில்லை. முதல்வர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று அறிவித்தும் ஒன்று ரெண்டு பெயர் மட்டுமே ராஜினாமா செய்துள்ளனர் பலரும் கீழ் மட்டத்தில் உள்ள அரசியல் விட்டில் பூச்சிகளை நம்பி திமுக தலைமையை எதிர்த்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருவது திமுக தலைமையை இன்னும் அதிக கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் பொருத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று கூறுவது போல தயவு தாட்சண்யம் ஏதுமின்றி திமுக தலைமை உடன்பிறப்புகளை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அண்ணா அறிவாலயத்தின் இன்றைய ஹாட் டாப்பிக். இதில் யார் யார் சிக்க போகிறார்கள்.முதல்வரின் உத்தரவுபடி ராஜினாமா செய்தவர்களுக்கு என்ன ஜாக்பாட் அடிக்கபோகிறது. மற்றவர்களுக்கு என்ன அதிர்ச்சி தகவல் காத்திருகிறது என்பதை திமுக அறிவிப்பு வெளிவந்த பிறகே தெரியும்.