• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போலீஸ் வேலையில் சேர விருப்பமா?

ByA.Tamilselvan

Jun 30, 2022

போலீல் வேலையில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு.3,552 காலிப்பணியிடங்களுக்கு அறிவுப்பு வெளிடப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இத்தேர்வு எழுத விரும்பும் இளைஞர்கள், ஜூலை 7ஆம் தேதி முதல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் ஜூலை 7ஆம் தேதி முதல், வாரத்தின் 7 நாள்களும் செயல்படும்.
விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 044-40016200, 044-28413658 ஆகிய தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.