• Sat. Apr 27th, 2024

மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு

ByKalamegam Viswanathan

Mar 4, 2023

கூடுதல் முதன்மைச் செயலாளர் , வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, 32 பயனாளிகளுக்கு ரூ.2.65 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பல்வேறு கோரிக்கை மனுக்களில் எளிதில் உடனடியாக தீர்க்கக்கூடிய மனுக்கள் உள்ளன. அம்மனுக்கள் மீது காலதாழ்த்தாமல் விரைந்து பயன் களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவிட வேண்டும். . மக்களின் குறைகளை தீர்ப்பது அரசு அலுவலர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்
இந்த ஆய்வின் போது, இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும், அலுவலகப் பணியாளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து கூடுதல் முதன்மைச் செயலாளர் , வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *