• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல்வருக்கு பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

ByA.Tamilselvan

Jun 16, 2022

திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்குமாறு முதல்வருக்கு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வலியுறுத்தியுள்ளார்
தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபகாலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பிராமண சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது. திமுகவின் பேச்சாளர் ராஜிவ் காந்தி, சமீபத்தில் பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பேசி உள்ளதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கட்சிகளுக்கோ, பிற கட்சி தலைவர்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ பதில் அளிக்கின்ற பொழுது பிராமண சமூகத்தின் பெயரினை இழுப்பது என்பது பகுத்தறிவு சார்ந்த செயல் இல்லை என்பதை அவர் உணர்ந்திட வேண்டும். இவர்களது பிராமண வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபடக்கூடாது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுரைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.