• Fri. Dec 13th, 2024

கோவில் சுற்றுச்சுவர், திருப்பணிகளை துவக்கம்

கோவில் சுற்றுச்சுவர் மற்றும் திருப்பணிகளை துவக்கி வைத்தார் பிரபா ஜி. ராமகிருஷ்ணன்.

குளச்சல் சிங்கங்காவு தர்ம சாஸ்தா திருக்கோயிலில் தமிழக சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ன் படி மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு வழிகாட்டுதலின் படி ரூபாய் 9.65 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மற்றும் திருப்பணி வேலைகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீ காரியம் செந்தில்குமார், நகர குளச்சல் திமுக செயலாளர் நாகூர் கான், கவுன்சிலர் ஷிலா ஜெயந்தி, கிளை செயலாளர் முகமது சாலி, அப்துல்லா, அர்ஜுனன், விளையாட்டு மேம்பாட்டு அணி நாகர்கோவில் மாநகர துணைத் தலைவர் மால்டன் ஜினின், தங்க நகை கடை உரிமையாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.