• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள்

ByG.Suresh

Jul 31, 2024

சிவகங்கை அருகே பெரு நிறுவன சமூக பொறுப்புத்திட்டத்தில் அரசு பள்ளிக்கு ரூ.36 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடங்கிவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார் (அம்மையப்பர் )குழுமத்தின் சமூக பொறுப்புத்திட்டம் மூலமாக ரூ.36.65 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரசனூரில் இயங்கி வரும், பர்ஸ்ட் கார்மெண்ட் மேனுபேக்சரிங் கம்பெனி (இ) பிரைவேட் லிமிடெட் சார்பாக அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நிறுவன சமூக பொறுப்புத்திட்டம் மூலமாக சுமார் ரூ. 36,65,434 (முப்பத்தாறு லட்சத்து அறுபத்து ஐந்தாயிரத்து நானுற்று முப்பத்து நான்கு ரூபாய்) மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கலையரங்கம் பேவர் பிளாக் சாலை கொடிமரம் மற்றும் ஆழ்துளை குடிநீர் குழாய் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரப்பட்டது.

புதிய வகுப்பறை மற்றும் கலையரங்கத்தை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி. இராஜசேகரன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த் ஆகியோர் திறந்து வைத்தனர். பர்ஸ்ட் கார்மெண்ட் மேனுபேக்சரிங் கம்பெனி (இ) பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வி. ஹரிதாஸ், மூத்த அலுவலகர் அக்சய் பாய், பொது மேலாளர் ரவிந்திரன், மனிதவளத் துறையை சேர்ந்த கண்ணன் மற்றும் ராஜசேகரன் அவர்கள்.கட்டிட மேலாளர் ராஜா, இவர்களுடன் போக்குவரத்து துறை மேலாளர் மதிக்குமார் மற்றும் அம்மையாரின் உறுப்பினர்கள். பள்ளித்தலைமை ஆசிரியர் ஆர்.புவனேஸ்வரி, வட்டாரக்கல்வி அலுவலர் பாலாமணி, ஊராட்சித்தலைவர் செல்வராணிஅய்யப்பன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியின் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.