• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தனித்தேர்வர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Byவிஷா

Dec 23, 2023

வருகிற 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், 10ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், டிசம்பர் 27-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை இ-சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், செய்முறை தேர்வுகளுடன் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ் 1 தேர்வுகள் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதியும், பிளஸ் 1 முடிவுகள் மே 14-ம் தேதியும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதியும் வெளியிடப்படும்.