• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு..,

BySeenu

Oct 6, 2025

ஜேகே டயர்ஸ் ஆதரவுடன் நடந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் மூன்றாவது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நிறைவடைந்தது. இந்த சுற்றில் இந்தியன் ரேசிங் லீக் , ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், மற்றும் ஃபார்முலா எல்ஜிபி4 அடங்கிய ஜேகே டயர்ஸ் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் ஆகிய பந்தயங்கள் நடைபெற்றன.

இந்தியன் ரேசிங் லீக் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் டிரைவரான ராவல் ஹைமன், இந்த சீசனின் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார்.
இரண்டாம் நாள் நடந்த ஐஆர்எல் டிரைவர் பி பந்தயத்தில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ராவல் ஹைமன் , 26 நிமிடங்கள், 46 புள்ளி 480 வினாடிகளில் பந்தயத்தை முடித்து முதல் இடத்தைப் பிடித்தார். ஸ்பீட் டெமான்ஸ் டெல்லி அணியின் ஷஹான் அலி மொஹ்சின் இரண்டாவது இடத்தையும், கிச்சா’ஸ் கிங்ஸ் பெங்களூரு அணியின் ருஹான் ஆல்வா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப்பில் ஷேன் சந்தாரியா, இட்சுகி சாடோ, மற்றும் இஷான் மாதேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். பந்தயம் 2-ல், சென்னை டர்போ ரைடர்ஸ் அணியின் ஷேன் சந்தாரியா வெற்றி பெற்றார். அவர் தனது சீசனின் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார். லுவிவே சம்புட்லா இரண்டாவது இடத்தையும், இட்சுகி சாடோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பந்தயம் 3-ல், அகமதாபாத் அபெக்ஸ் ரேசர்ஸ் அணியின் ஜப்பானிய வீரர் இட்சுகி சாடோ வெற்றி பெற்றார். சம்புட்லா மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், இஷான் மாதேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
பந்தயம் 4-ல், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியின் இஷான் மாதேஷ் வெற்றி பெற்றார். இது அவருக்கு இந்த சீசனின் இரண்டாவது வெற்றியாகும். சாய்ஷிவா சங்கரன் இரண்டாவது இடத்தையும், ஷேன் சந்தாரியா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஜேகே டயர்ஸ் தேசிய ரேசிங் சாம்பியன்ஷிப் ஃபார்முலா என்சிபி4 பிரிவில், எம் ஸ்போர்ட்ஸ் அணியின் துருவ் கோஸ்வாமி மற்றும் டார்க் டான் ரேசிங் அணியின் மெஹுல் அகர்வால் ஆகியோர் வெற்றிகளைப் பெற்றனர். பந்தயம் 3-ல், போலோவிலிருந்து தொடங்கிய பெங்களூரைச் சேர்ந்த துருவ் கோஸ்வாமி 22 நிமிடங்கள், 4 புள்ளி 600 வினாடிகளில் வெற்றி பெற்றார். டார்க் டான் ரேசிங் அணியின் தில்ஜித் டி எஸ் இரண்டாவது இடத்தையும், மெஹுல் அகர்வால் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பந்தயம் 4-ல், டார்க் டான் ரேசிங் அணியின் மெஹுல் அகர்வால் வெற்றி பெற்றார். இது அவருக்கு இந்த வார இறுதியில் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும். அவரது அணியின் வீரர் தில்ஜித் இரண்டாவது இடத்தையும், கோஸ்வாமி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அடுத்த சுற்று பந்தயங்கள் கோவா ஓசன்ஃப்ரன்ட் ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி மும்பை ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இரவுப் பந்தயமாக நடக்கும்.