காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர். சாலையில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை இன்று தொடங்கப்பட்டது.

அப்போது, “புதுச்சேரி என்.ஆர்.–ப.ஜ.க கூட்டணியின் ஊழல்வாத ஆட்சியால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் விடுதலை பெறாத அடிமைகளே” என்ற கருப்பொருளுடன், புதுச்சேரி விடுதலை தினத்தன்று அடிமை தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது மத்திய மாநில அரசுகள் மற்றும் ஊழலுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தொடர்ந்து பேசிய இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் எஸ். ஆனந்த்குமார் “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஊழல் இந்நிகழ் ஆட்சியில் நடைபெற்று வருகிறது,” என்றார்.

மத்திய மற்றும் மாநில அரசின் விதிகளை மீறியும், உச்சநீதிமன்ற ஆணைகளை அவமதித்தும், தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் பெற்று பாரபட்சமாகவும், குறுக்குவழியாகவும் அந்த பதவிகளை அபகரித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) விசாரணை மேற்கொள்ள பாரத பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர் நேர்மையுடன் உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகள் 100க்கும் மேற்பட்ட இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)