• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சீன அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா

Byமதி

Nov 22, 2021

புதிதாக கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகபட்டிணம் போர்க்கப்பல், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டணம்’ போர்க்கப்பலை இன்று முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார்.

ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பலானது ‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மும்பையில் உள்ள Mazagon Dock கப்பல்கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. இது பாதுகாப்புத்துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்த பல்வேறு மேம்பாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. கண்டிப்பாக இது சீனாவை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.