• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உலக சமத்துவமற்ற நாடுகளில் இந்தியா – உலக சமத்துவமின்மை அறிக்கை!

2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகையில் 1% பேர் மொத்த தேசிய வருமானத்தில் 21.7% சம்பாதித்துள்ளனர், அதே சமயம் கீழே உள்ள 50% பேர் வெறும் 13.1% மட்டுமே சம்பாதித்துள்ளனர்.இந்தியாவின் மக்கள்தொகையில் முதல் 1% பேர் 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கு (21.7%) சம்பாதித்துள்ளனர்,

அதே சமயம் 50% பேர் வெறும் 13.1% பணத்தை மட்டுமே சம்பாதித்துள்ளனர் என்று செவ்வாயன்று வெளியிடப்பட்ட இந்த ஆண்டு உலக சமத்துவமின்மை அறிக்கை காட்டுகிறது .2021 ஆம் ஆண்டில் நாட்டின் தேசிய வருமானத்தில் 57% அளவு சாம்பாத்தியத்தை வெறும் 10% பேர் சாம்பாதித்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் இணை இயக்குனரான லூகாஸ் சான்சல் எழுதிய அறிக்கை, பிரெஞ்சு பொருளாதார நிபுணர் தாமஸ் பிகெட்டி உட்பட பல நிபுணர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.அந்த அறிக்கையில் “இந்தியா ஒரு ஏழை மற்றும் மிகவும் சமத்துவமற்ற நாடாக, ஒரு வசதியான உயரடுக்குடன் தனித்து நிற்கிறது”

என்று கூறுகிறது.அறிக்கையின் முன்னுரையில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்களான அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுப்லோ ஆகியோர், உலகின் “மிகவும் சமத்துவமற்ற நாடுகளில்” இந்தியாவும் இருப்பதாகக் கூறியுள்ளனர்.2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள வயது வந்தோரின் சராசரி ஆண்டு வருமானம், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ரூ 2,04,200 என்று அறிக்கை கூறியது. இருப்பினும், மக்கள்தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 50% பேர் ஆண்டு முழுவதும் ரூ.53,610 சம்பாதித்ததில் இருந்து நாட்டின் வருமான சமத்துவமின்மையை புரிந்து கொள்ளலாம்.

வாங்கும் திறன் சமநிலை என்றால் என்ன?

உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி, வாங்கும் திறன் சமநிலை என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் சம்பாதித்த வருமானத்தை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அந்த நாட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையால் குறைக்க (அல்லது உயர்த்த) நிலையான வழியாகும்.மேலும் அறிக்கையில், “உதாரணமாக, பிரான்சுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வீட்டு வசதி ஒப்பீட்டளவில் மலிவானது, ஆனால் ரெட் ஒயின் இந்தியாவை விட பிரான்சில் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.மேலும் உலகெங்கிலும் உள்ள வாழ்க்கைச் செலவுகளை சரியாக ஒப்பிட்டுப் பார்க்க, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஒப்பீட்டு விலைகள் (எ.கா. மது மற்றும் வீடுகள்) மற்றும் தனிநபர்களின் நுகர்வு பைகளில் உள்ள ஒவ்வொரு பொருள் மற்றும் சேவையின் ஒப்பீட்டு அளவும் பற்றிய தகவல் எங்களுக்குத் தேவை.

இந்தியாவின் செல்வ சமத்துவமின்மை :-

செல்வத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் சமத்துவமின்மை இன்னும் அப்பட்டமாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.ஒரு இந்திய குடும்பத்தின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 9,83,010 ஆக இருக்கும் போது, நாட்டின் மக்கள்தொகையில் அடிமட்ட 50% பேர் “கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத நிலையில் சராசரி சொத்து மதிப்பு ரூ.66,280” என்று அறிக்கை கூறியது.நாட்டின் மொத்த செல்வத்தில் 29.5% உடைய நடுத்தர வர்க்கத்தினரும் ஒப்பீட்டளவில் ஏழ்மையானவர்கள். இந்தியாவில் உள்ள பணக்கார 1% மக்கள் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 33%- சதவீதத்தை வைத்துள்ளனர்.

பாலின சமத்துவமின்மை :-

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெண் தொழிலாளகளின் வருமானப் பங்கு 18% என்பது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும் என்று அறிக்கை கூறுகிறது. இந்த எண்ணிக்கை சீனாவைத் தவிர்த்து ( 21% )ஆசியாவிலேயே சராசரியை விட கணிசமாகக் குறைவாகும்.இந்தியாவின் பெண் தொழிலாளர் வருமானப் பங்கு 1990 முதல் எட்டு சதவீத புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த அதிகரிப்பு பிராந்திய சராசரிக்கு இணையான எண்ணிக்கையை எடுக்க போதுமானதாக இல்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

1980 களின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவின் பொருளாதாரத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கியது மற்றும் தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகள் “உலகில் இருந்த வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மை அதிகரிப்புக்கு மிகவும் தீவிரமாக வழிவகுத்தது” என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் பொருளாதார ஆசிரியர்கள் “பொருளாதார சீர்திருத்தங்களால் முதல் 1% பேர் பெருமளவில் பயனடைந்துள்ளனர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குழுக்களிடையே ஒப்பீட்டளவில் வளர்ச்சி மெதுவாக உள்ளது மேலும் வறுமை நீடிக்கிறது” என்று கூறினார்கள்.இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட சமத்துவமின்மை தரவுகளின் தரம் கடந்த மூன்று ஆண்டுகளில் “தீவிரமாக மோசமடைந்துள்ளது” என்றும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.