• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Dec 2, 2025

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் வராமல் அரசு வழிகாட்டுதலின்படி தீபம் ஏற்ற மதசார்பற்ற கூட்டணி கோரிக்கை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள ஜானகி அம்மாள் அரங்கத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில்:

நேற்றைய தினம் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமான உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தீர்ப்பு ஒன்று வெளியானது இந்தியா கட்சி கூட்டணி பொருத்தவரையில் பொதுவாக இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுடைய ஒற்றுமையை சீர்கெடுக்க கூடிய விதத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சக்திகள் இந்த பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1921 ஆம் ஆண்டு தொடங்கி 2012 ஆம் ஆண்டு வரை பல்வேறு தீர்ப்புகள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக மத நல்லிணக்கத்தை சீர்படுத்தக் கூடிய விதத்தில் சில அமைப்புகள் இங்கு வந்து வழி செய்வதும், அதற்கு நீதிமன்றங்களும் அப்படிப்பட்ட உதவிகள் செய்யும் நிலைமை என்பது நீடிக்கிறது.

எனவே நாங்கள் சந்தித்து மக்கள் அமைதியை பேணக் கூடிய விதத்தில் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை பெற்று நாளை எந்த விதமான குழப்பமும் இல்லாமல் அந்த தீபம் ஏற்றக்கூடிய நிகழ்ச்சியை நிறைவேற செய்வது அனைத்து கட்சியின் கனவாக உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தும் என்ற நம்பிக்கையும் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரை சந்திக்கின்றோம் எங்களுடைய கட்சியினுடைய மாநில தலைமையிடம் சொல்லி இருக்கின்றோம். அதேபோல மற்ற கட்சியினுடைய மாநில தலைமைக்கு தகவல் சொல்லி இருக்கின்றார்கள். கடந்த 1984 ஆம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 40 ஆண்டுகள் பிள்ளையார் கோயில் அருகில் இந்த தீபம் ஏற்றக்கூடிய நிகழ்ச்சி இந்த அறநிலையத்துறை சார்பாக செய்திருக்கிறார்கள். எந்த விதமான தர்கா சம்பந்தமாக யாரும் தலையிடவில்லை, இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் இதைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆனாலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் உடைய ஒற்றுமையை மத நல்லிணக்கத்தை விரும்பாத சில சக்திகள் வந்து தொடர்ச்சியாக இப்படிப்பட்ட இடையூறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் பேசக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக கார்த்திகை தீபம் இருக்கின்றது. அறநிலைய துறை மற்றவர்கள் ஒற்றுமையை பாதுகாக்கும் விதத்தில் இதை செய்து முடிக்க வேண்டும் என்று இந்தியா கட்சியின் ஒரே கருத்தாக இருக்கிறது.

உச்சியில் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு

சமீபத்தில் இது முருகன் மலையா இல்லை, சிக்கந்தர் மலையா என்று இருக்கிறது. ஆனால் மக்களிடம் எப்போதும் இந்த சர்ச்சை இருந்ததில்லை. இப்போது ஒவ்வொரு முறையும், தங்களது உரிமை சார்ந்த பிரச்சனைகளாக நீதிமன்றம் செல்லும் போது இது இவர்களுக்கு சொந்தம், அது அவர்களுக்கு சொந்தம் என்று மக்கள் மனதில் கருத்து வேறுபாடுகளாக நினைக்கிறார்கள் என்று நாங்கள் பார்க்கிறோம்.

இங்க இருக்க கூடிய முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, இந்துக்களாக இருந்தாலும் சரி இன்றைக்கும் சகோதர தன்மையாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாத சின்ன சக்திகள் அதற்கு இடையூறாக இருக்கிறார்கள் என்று நாங்கள் பார்க்கிறோம் என ராஜேந்திரன் கூறினார்.