• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா..,

ByKalamegam Viswanathan

Aug 15, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பள்ளிகளில் நாட்டின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது சோழவந்தான் பசும்பொன் நகர் எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி கொடி வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேச தலைவர்களான மகாத்மா காந்தி வ உ சிதம்பரம் பிள்ளை மாமன்னர் மருது பாண்டியர்கள் மகாகவி பாரதியார் உள்ளிட்ட தேச தலைவர்கள் வேடமணிந்து மாணவர்கள் சுதந்திர தின உரையாற்றினார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் இலக்கிய கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் மருது பாண்டியன் பரிசுகள் வழங்கினார் சுதந்திர தின விழாவில் பள்ளி நிர்வாகிகள் வள்ளி மயில் மணிமுத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதல்வர் தீபா ராகினி விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றார்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைமை ஆசிரியை தேசிய கொடி ஏற்றி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.