• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

அதிகரித்துவரும் கொரோனா பரவல் – பிரதமர் அவசர ஆலோசனை..!

ByA.Tamilselvan

Dec 22, 2022

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் அதிகவேகமாக பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது.
ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது.இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்திற்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.