• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருச்சுழியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

ByBala

Apr 19, 2024

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்கட்டமாக மக்களைவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 57.86% சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 58.34% வாக்குபதிவாகியுள்ளது.

இதனைதொடர்ந்து இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணியில் இருந்து வாக்குபதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம். அறந்தாங்கி : 53.35 சதவீதம், பரமக்குடி (தனி ) : 53.29 சதவீதம், திருவாடனை : 51.37 சதவீதம், இராமநாதபுரம் : 48.35 சதவீதம், முதுகுளத்தூர் : 51.28 சதவீதம், திருச்சுழி : 59.94 சதவீதம் என சராசரி : 52.46 சதவீதம் பதிவானது.