• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். மெயின் அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.