• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது

ByA.Tamilselvan

Sep 12, 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு அறிவிப்பு.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் 34 சதவீத அகவிலைப்படி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். 1.07.2022 தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இதனால் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவார்கள்.