• Tue. Feb 18th, 2025

‘கேம் சேஞ்சர்’ படத்தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

ByP.Kavitha Kumar

Jan 21, 2025

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தெலுங்கு திரையுலகின் முக்கிய திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு. இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

அண்மையில் இவர், தெலங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக மாநில அரசால் நியமிக்கப்பட்டார். இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ மற்றும் ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ ஆகிய இரு படங்களும் இம்மாதம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இவர் விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜுவின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தில் ராஜுவின் உறவினர்கள் வீடுகள் உட்பட 8 இடங்களில் வரிமான வரித்துறை சோதனை நடத்தி வருவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.