• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு..!

Byவிஷா

Oct 7, 2023

இமாச்சல பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
நாகரீகமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்தாலும் மூடநம்பிக்கைகள் இன்னும் புரையோடி தான் இருக்கின்றன. குறிப்பாக கிராமங்களில் இன்னும் பெண் குழந்தை பிறந்தாலே செலவு தான் என நினைத்து பெண்சிசுக் கொலைகள் தொடர்ந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பலசலுகைகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றும் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார். 2 பெண் குழந்தைகள் பிறந்த பிறகு குழந்தை வேண்டாம் என குடும்ப கட்டுப்பாடு செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.