• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா !

ByA.Tamilselvan

Aug 24, 2022

சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா சாதனையாளர்களுக்கு விருது மற்றும் வெள்ளி பதக்கம் அளிப்பு.
தென்காசி மாவட்டம்கடையநல்லூர் அருகே ஊர்மேனியழகியானில் சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் மகரகம் திறப்பு விழா மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.அறக்கட்டளை நிறுவனர் சிவதானு தலைமை தாங்கினார்.துளிர்,அறக்கட்டளையின் வழிகாட்டுனர் டாக்டர் அழகப்பன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் இரத்னா பிரகாஷ் வரவேற்புரையாற்றினர்.ஊர்மேனி அழகியான் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராஜ் வேலாயுதபுரம் பஞ் சாயத்து தலைவர் வேலுத்தாய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் வனவிலங்குகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை செய்துவரும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் சேக் உசேன்க்கு விருது மற்றும் வெள்ளி பதக்கத்தையும் சேக் உசேன் இதுவரை 5000 மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார்.அதில் ராஜ நாகம் மலைப்பாம்பு போன்றவை அடங்கும்.பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்க்கு பாம்புகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் சேக் உசேன். என்பது குறிப்பிடத்தக்கது .
ஏழை எளியோர் மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிய இரவும் பகலும் சேவையாற்றும் விருது நகர் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியர் மாரிய ப்பன் சென்னை மாந கராட்சி பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவிகளுக்கு இலவசமாக பரத நாட்டியம் கற்று தரும் ஆசிரியை பவானி ஆகியோருக்கும் ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சின்னத்துரை அப்துல்லா பரிசுகள் வழங்கி கெளரவித்து பாராட்டினார்.
விழாவில் அறங்காவலர்கள் பி ஆர் சந்திரன் அண்ணாமலையார் நேபால் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.தலைமை உரை ஆற்றிய ஐயா டாக்டர் சிவதாணு சத்ய உணர் தொண்டு அறக்கட்டளையின் சார்பில் இந்தநி ர்வாக அலுவலகம் மகரகம் என்ற பெயரில் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது. வருகின்ற காலங்களில் சத்ய உணர் தொண்டு நிறுவன நிர்வாக அலுவலகமான மகரகத்தின் மூலம் இளைஞர்களுக்கு கனவை நினைவாக்கும் பயிற்சி முகாம் இயற்கை வளங்களை பாதுகாத்தல் வேலை வாய்ப்புகளுக்கு வழிகாட்டுதல் பெண்கள் சுய உதவி குழு பயிற்சி முகாம் சமூக தொண்டாற்றுதல் முதியோர்களுக்கு மருத்துவ முகாம் யூத் கேம் போன்ற தொண்டுகள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். தமிழகம் முழுவதும் உள்ள அறங்காவலர்கள் அனைவரும் மகரகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்வின் இறுதியில் அருள் நிதி பிரித்வி நன்றி கூறினார்.