

சுங்கச்சாவடி கட்டணங்களை வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கூட்டமும்,நெரிசலும் காலத்தாமதமும் ஏற்பாடாமல் இருக்க பல புதிய உத்திகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேடை
படம்பிடிக்கும் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசிய அவர் தானியங்கி கேமராக்கள் நம்பர் பிளேட்டை படம் பிடித்த பிறகு உரிமையாளர்கள் வங்கி கணக்கிலிருந்து தானாக கட்டணம் பிடிக்கப்படும் . இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் நெரிசல் வெகுவாக குறையும் என்றார்.
