• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

உணவு பதப்படுத்துதல் பயிற்சியின் துவக்க விழா..!

நபார்டு வங்கியின் சார்பில் (MEDP) குறு நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், (SHG) சுய உதவி குழு பெண்களுக்கான உணவு பதப்படுத்துதல் பயிற்சியின் துவக்க விழா நிகழ்ச்சி மார்த்தாண்டம் எஸ்.வி.கே மெட்ரிக் பள்ளி அருகில், உள்ள சி. டி. இ பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு நபார்டு வங்கி செய்து வரும் பணிகளை பாராட்டி பேசினார், குறிப்பாக மிகவும் பின் தங்கிய கிராமபுறங்களில் உள்ள பெண்களுக்கு பல்வேறு சிறு குறு தொழில்கள் பயிற்சி கொடுத்து அதை சந்தை படுத்தவும் பயிற்சி கொடுத்து அவர்கள் வாழ்வு மேம்பாடு அடைய செய்து வருகிறது. நீங்களும் ஒரு குழுவாக இருந்து இந்த பயிற்சி முடித்து வாழ்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என பேசினார். பயிற்சியை வழி நடத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை மாவட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன் பயிற்சி பற்றி விளக்கவுரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி நபார்டு வங்கி துணை பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவி பமலா, காங்கிரஸ் வட்டார தலைவர் என். ஏ. குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஆதிலிங்கபெருமாள், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.