• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!

Byவிஷா

Jun 6, 2023

திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர். அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனைப் பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரைப் பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் கைகலப்பாகி மோதல் ஏற்பட்டதாம். இதனால் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள், சேர்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசார் சமாதானம் செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.