• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு தாவரவியல் பூங்காவில்
குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் உதகை அரசு தாவரவியல் பூங்காவை சுமார் 1 லட்சத்தி 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் வார விடுமுறை இன்று உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.