• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில்
அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

Byகாயத்ரி

Mar 6, 2022

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த ராஜ்குமார், லட்சம், கணேசன், கோட்டை பாண்டி, பேச்சிமுத்து, ஜெகன், ராஜேஷ்குமார், ராமச்சந்திரன், கார்த்திக், தங்கம், அஜித்தேல் ஆகியோர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருத்தங்கல் பாலாஜி நகரில் நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, திருத்தங்கல் நகர அம்மா பேரவை செயலாளர் ரமணா, சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.