• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில்.., பா.ஜ.க. நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

Byவிஷா

Nov 4, 2023

கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில், பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடிக்கம்பம் விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஈசிஆர் பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு பாஜக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. இந்த கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாஜகவினரும் அப்பகுதியில் குவிந்து இருந்தனர். இதன்பின் வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்றி மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கானாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஒரு சில வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா விளம்பர போஸ்ட்டரில் முதல்வர் புகைப்படத்தை அகற்றிவிட்டு பிரதமர் டத்தை ஒட்டியது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்தனர். இதுபோன்று, போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்தது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை தென்காசியில் நடைபெற்ற போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்த அமர் பிரசாத் ரெட்டி மீது அங்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது, கொடிக்கம்பம் தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.