சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 225 வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மருது பாண்டியர்களின் திரு உருவப் படத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தவெக சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ மருது பாண்டியர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கொரியர் கணேசன் தலைமையில் நிர்வாகிகள்
கவுன்சிலர் சண்முக பாண்டியராஜா கேபிள் மணி பேட்டை கிரில் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா முத்துக்குமார்தென்கரை முருகன் பேரூர் நிர்வாகி சுரேஷ்முட்டை கடை காளி டெய்லர் அருண் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்எல்ஏ மற்றும் கொரியர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சங்கங்கோட்டை கிராமத்தினர் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.




